இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.50 கோடியில் விரிவாக்க பணிகள்-அதிகாரிகளுடன், கலெக்டர் ஆய்வு

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் ரூ.50 கோடியில் நடக்க உள்ள விரிவாக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-06-23 15:02 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் ரூ.50 கோடியில் நடக்க உள்ள விரிவாக்கப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான ரூ.50 கோடி மதிப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள விரிவாக்க பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வரும் வழியில் அர்ஜுனா ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்கவும், கோவில் வளாகத்தில் 330 கடைகள் கட்டும் பணிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டிலும், அன்னதானக்கூடம் ரூ.2.5 கோடி மதிப்பீட்டிலும், கோவில் வளாகத்தில் பல்நோக்கு ஓய்வுக்கூடம் ரூ. 4 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படுவதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவில் எல்லைப்பகுதியில் சுற்றுச்சுவர் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்ட அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவிலின் மேற்கு மற்றும் தெற்கு வெளிப்பிரகாரத்தின் வெளியே கருங்கல்தளம் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டிலும், கோவில் வளாகத்தில் சுற்றுச் சாலைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலும், அம்மை நோய் பாதித்தவர்கள் விரதம் மேற்கொள்ள வயனமண்டபம் ரூ.50 லட்சம் மதிப்பிலும், கலையரங்கம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், பெண்களுக்கு குளியலறை மற்றும் கழிப்பறை ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படுவதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரூ.50 கோடி

கோவில் வடமேற்கு பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை தொட்டி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்ட விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பூங்கா ரூ.3 கோடி மதிப்பீட்டில் அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன்கருதி அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கோவில் பெருந்திட்ட வளாகத்தினை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அறங்காவலர் ராமமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்