கன்டெய்னர் லாரியில் ரூ.45 லட்சம் 'ஷூ'க்கள் திருட்டு

சென்னை துறைமுகத்திற்கு கன்டெய்னர் லாரியில் எடுத்து சென்ற ரூ,45 லட்சம் ‘ஷூ’க்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-17 21:44 GMT

வெள்ளவேடு,

காஞ்சீபுரம் அடுத்த செய்யாறு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட விலைஉயர்ந்த 'ஷூ'க்கள் சென்னை துறைமுகத்திற்கு கன்டெய்னரில் அனுப்பி வைக்கப்பட்டது. கன்டெய்னர் லாரியில் பிரபாகரன், ஐயப்பன், இளமாறன், தனசேகர் ஆகியோர் சென்றனர். துறைமுகத்திற்கு சென்ற நிலையில் கன்டெய்னர் லாரியிலிருந்து விலை உயர்ந்த 'ஷூ'க்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் பறிமுதல்

இதையடுத்து லாரியில் வந்த இளமாறன், தனசேகர் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்த போது, கன்டெய்னர் லாரி வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அருகே சர்வீஸ் சாலையில் வந்த போது, அங்குள்ள காயலான் கடையில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஷூக்களை எடுத்து பதுக்கி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து விலை உயர்ந்த ஷூக்களை பறிமுதல் செய்த பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையிலான போலீசார், தலைமறைவாக உள்ள பிரபாகர், ஐயப்பன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்