கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் வீடு மீட்பு
களக்காட்டில் கோவிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் வீடு மீட்கப்பட்டது.
நெல்லை:
களக்காடு கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அப்பகுதியில் உள்ள சந்தானகோபால கிருஷ்ண சுவாமி கோவில் நிர்வாகியாக உள்ளார். இந்த கோவிலுக்கு சொந்தமான 5 சென்ட் வீட்டை போலி ஆவணம் மூலம் உரிமை கொண்டாடிய நபரிடம் இருந்து மீட்டு தரக்கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் கண்ணன் புகார் அளித்தார். அந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாசுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ரூ.40 லட்சம் மதிப்பிலான வீட்டை மீட்டனர். அதற்கான ஆவணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சரவணன், கோவில் நிர்வாகி கண்ணனிடம் வழங்கினார்.