திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.36 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35.36 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-04-30 20:18 GMT

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை 8. 25 மணி அளவில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மும்பையை சேர்ந்த குரேஷியா (வயது 21) என்ற பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த வயர்லெஸ் போன் மற்றும் டெஸ்க்டாப் ஆகியவற்றில் தங்கத்தை உருளை வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் இருந்து ரூ.35 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பிலான 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்