டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் தங்கம், வைரம் திருட்டு
நீலாங்கரை அருகே டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் தங்கம், வைரம் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள அக்கரை சி.கிளப் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அபர் ஜிந்தால் (வயது 39). டாக்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான டெல்லி அருகே உள்ள நொய்டாவுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் நேற்று சென்னைக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.