கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி

கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்த வழக்கில் விடுதி வார்டனின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-25 20:00 GMT

கல்லூரி மாணவிகளிடம் ரூ.31 லட்சம் மோசடி செய்த வழக்கில் விடுதி வார்டனின் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.


விடுதி வார்டன்


கோவை சரவணம்பட்டி, துடியலூர் ரோட்டில் தனியார் மாண விகள் விடுதி உள்ளது. இங்கு 60 மாணவிகள் தங்கி உள்ளனர். இங்கு வார்டனாக சுகிர்தா (வயது36) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் ஜெயக்குமார் டிரைவராக இருந்தார்.


இவர்கள் கோவை உடையாம்பாளையத்தில் வசித்து வந்தனர். சுகிர்தாவின் கூட்டாளி பிரபு (30), இவர் பன்னிமடை பகுதியில் வசித்து வருகிறார். சுகிர்தாவை விடுதியில் வார்டன் பணிக்கு பிரபு சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 1.2.2020-ம் ஆண்டு முதல் 24.2.2022-ம் ஆண்டு வரை மாணவிகள் விடுதிக்கு செலுத்திய கட்டணத்தை, வார்டன் சுகிர்தா, தனது வங்கி கணக்கிற்கு கூகுள்பே மூலம் செலுத்தினால் தான் விடுதி கணக்கில் வரவு வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இவ்வாறு ஏராளமான மாணவிகள் செலுத்திய கட்டணத்தை விடுதி கணக்கில் சேர்க்காமல் சுகிர்தா மோசடி செய்ததாக தெரிகிறது. மேலும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் மாணவிகளிடம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.


கூட்டாளி கைது


இந்த மோசடிக்கு சுகிர்தாவுக்கு, அவருடைய கணவர் ஜெயக் குமார், கூட்டாளி பிரபு ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த மோசடி குறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் மாணவிகள் சார்பில் புகார் செய்யப்பட்டது.

இது குறித்து உதவி கமிஷனர் குணசேகரன் மேற்பார்வையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று கூட்டாளி பிரபு கைது செய்யப்பட்டார்.

சுகிர்தா, அவருடைய கணவர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்