ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் ரூ.25 லட்சம் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

வந்தவாசி அருகே ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-02-07 16:33 GMT

வந்தவாசி அருகே ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை-வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமம் பிராமணர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 71), ஓய்வுபெற்ற தொழிலாளர் ஆய்வாளர். அவரது மனைவி மரகதம் (65), ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. இருவரும் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து நேற்று காலை ஊருக்கு திரும்பினர். இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, மேலே ஓடு பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

ரூ.25 லட்சம் நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை

மேலும் அதில் இருந்த 54 பவுன் நகை மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றது ெதரியவந்தது.

கொள்ளைபோன நகை-வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்