சேலத்தில் வியாபாரியிடம் ஜவுளி வாங்கி ரூ.21½ லட்சம் மோசடி-ஒரே குடும்பத்தில் 4 பேர் மீது வழக்கு

சேலத்தில் வியாபாரியிடம் ஜவுளி வாங்கி ரூ.21½ லட்சம் மோசடி செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-02-15 22:41 GMT

ஜவுளி வியாபாரம்

சேலம் டவுன் ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 56). இவர் ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். சென்னை தி.நகர் பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருபவர் ஆறுமுகசாமி. அவரது கடைக்கு கடந்த 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் செந்தில்குமார் ஜவுளிகள் வினியோகம் செய்து வந்தார்.

இதற்கிடையில் ஜவுளி வாங்கியதில் பாக்கி தொகையான ரூ.21 லட்சத்து 46 ஆயிரத்து 446-யை ஆறுமுகசாமி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் அவரிடம் செந்தில்குமார் பணத்தை திருப்பி கேட்ட போது மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

4 பேர் மீது வழக்கு

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து செந்தில்குமாரிடம் ஜவுளி வாங்கி மோசடி செய்ததாக ஆறுமுகசாமி, அவரது மனைவி ஈஸ்வரி, அவரது மகன்கள் ரகுராம், சங்கர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்