ஆசிரியையிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்
பண்ருட்டி அருகே ஆசிரியையிடம் ரூ.2 லட்சம் நகை அபேஸ்
பண்ருட்டி
பண்ருட்டி எடுத்த எலவத்தடி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியசீலன் மனைவி சவுந்தரவள்ளி(வயது 33). இவர் காடாம்புலியூர் புறங்கனி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆசிரியை சவுந்தரவள்ளி, பண்ருட்டியில் உள்ள ஒரு நகைக்கடையில் 5 பவுன் தாலி சங்கிலியை வாங்கினார். பின்னர் அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு நெய்வேலி செல்லும் பஸ்சில் ஏறினார். காடாம்புலியூர் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நின்றதும், கீழே இறங்கிய சவுந்தரவள்ளி தனது பையை பார்த்தார். அப்போது அவர் வைத்திருந்த நகைப்பையை காணவில்லை. சவுந்தரவள்ளி நகை வாங்கி விட்டு பஸ்சில் வருவதை நோட்டமிட்ட மா்மநபர்கள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.