திருச்சி தொழில் அதிபரிடம் ரூ.1.90 கோடி மோசடி

திருச்சி தொழில் அதிபரிடம் ரூ.1.90 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-16 19:24 GMT

திருச்சி:

திருச்சி தென்னூர் அண்ணாநகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அசோக்(வயது 43). தொழில் அதிபரான இவருக்கு, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் டாக்டர் பிரகாஷ், அழகேசன், நாச்சிக்குறிச்சி வாசன்வேலியை சேர்ந்த டாக்டர் புரோஜா ஆகிய 3 பேர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் அசோக்கிடம் தாங்கள் நடத்தி வரும் சாய் ஷேர் டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டுக்குள் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பிய அசோக் ரூ.95 லட்சத்தை முதலீடு செய்தார். இதற்காக ஒப்பந்தமும் செய்து இருந்தனர். இதையடுத்து ஒப்பந்த காலம் முடிந்தபிறகு, அவருக்கு ரூ.1 கோடியே 90 லட்சத்தை தர வேண்டும். ஆனால் அந்த தொகையை அவர் கேட்டபோது, அவர்கள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அசோக் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் மனுதாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் டாக்டர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்