ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.18 கோடி திரிசூலம் கோவில் சொத்து மீட்பு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.18 கோடி திரிசூலம் கோவில் சொத்து மீட்பு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை.

Update: 2022-06-28 21:04 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மாவட்டம் திரிசூலம், திரிசூலநாதர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 3 கடைகள், 1 வீடு ஆகிய சொத்துகள், ஐகோர்ட்டு உத்தரவுபடி பூட்டி இலாகா முத்திரையிட்டு கோவில் வசம் கொண்டுவரப்பட்டது. இதனுடைய தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.18 கோடியாகும். இந்த நிகழ்வின்போது, அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், கோவில் நில தாசில்தார், ஆர்.டி.ஓ., காவல்துறையினர் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

முன்னதாக இது குறித்து தகவல் அறிந்ததும், நடவடிக்கை எடுக்க வந்த அதிகாரிகளை வரவிடாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், சீல்' வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருவர் தீக்குளிக்க முயன்றார். மற்றொருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின், கோர்ட்டு உத்தரவை எடுத்துக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்