திரச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திரச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-25 19:13 GMT

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் கடத்தல் சம்பவம் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடைமையை சோதனை செய்ததில் பேஸ்ட் வடிவில் 145 கிராம் தங்கத்தையும், சங்கிலி வடிவில் 90 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.14.12 லட்சம் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்