ரூ.12 கோடி லஞ்சம்: சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!
ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை,
சென்னையில் சி.டி.எஸ் நிறுவனம் கட்டடம் கட்ட ரூ.12 கோடியில் லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2011-2016 காலகட்டத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி வழங்க சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள், லஞ்சம் கொடுத்த அப்போதைய சி.டி.எஸ், எல்&டி நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.