சோலார் பல்பு நிறுவன ஊழியர்களிடம் ரூ.11½ லட்சம் மோசடி

வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்துமாறு கூறி, சோலார் பல்பு நிறுவன ஊழியர்களிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2022-12-02 18:45 GMT

பீளமேடு

வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்துமாறு கூறி, சோலார் பல்பு நிறுவன ஊழியர்களிடம் ரூ.11½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

சோலார் பல்பு

கோவை பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்கு சொந்தமான சோலார் பல்புகள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் உள்ளது. அங்கு உள்ள மேலாளருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் தான் ராணுவ அதிகாரி என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டு மொத்தமாக சோலார் பல்புகள் வேண்டும். அதற்கான விலை விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே அந்த நிறுவனத்தினர், அந்த நபரின் செல்போன் எண் ணுக்கு சோலார் பல்பு விலை விவரங்களை அனுப்பி வைத்தனர். அதை பார்த்த அந்த நபர் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட் கள் வேண்டும்.

அதற்கான பணத்தை ஆன்லைன் மூலம் மொத்தமாக பரிமாற்றம் செய்ய முடியாது.

அதனால் உங்களது நிறுவன ஊழியர்களின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்துகிறேன். எனவே அந்த ஊழி யர்களின் வங்கி கணக்கில் இருந்து எனது கணக்கிற்கு 1 ரூபாய் அனுப்புமாறு கூறி உள்ளார்.

ரூ.11½ லட்சம் மோசடி

இதையடுத்து அந்த நிறுவனத்தின் கோவை மற்றும் பெங்களூரு கிளை ஊழியர்கள் சிலரின் வங்கி கணக்கில் இருந்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் 1 ரூபாய் அனுப்பிய தாக தெரிகிறது.

விசாரணை

1 ரூபாயை அனுப்பியதும், அந்த நிறுவன ஊழியர்களின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் உடனடியாக ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 235-ஐ எடுத்து மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடிய வில்லை.

இது குறித்து அந்த நிறுவனத்தின் கோவை பீளமேடு கிளை நிர்வாக மேலாளர் சுனிதா, கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்