கடையில் பணப்பெட்டியை உடைத்து ரூ.1½ லட்சம் திருட்டு

வேலூரில் கடையில் பணப்பெட்டியை உடைத்து ரூ.1½ லட்சம் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-02 18:24 GMT

வேலூர் விருப்பாட்சிபுரம் ஜீவா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 37). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றார். பின்னர் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

இதுகுறித்து அவர் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மர்மநபர்கள் கடை ஷட்டரின் இடைப்பட்ட பகுதிக்குள் உள்ளே நுழைந்து பணம் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அதில் சத்துவாச்சாரியை சேர்ந்த 11 மற்றும் 15 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து பணத்தை திருடியது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்