வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.
பணம் கொடுத்தால் வேலை
கோவை சிங்கநல்லூரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது45). இவரு டைய மனைவி தன்யா (வயது39). இவர், கோவை இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் டாக்டராக பணியாற்றுவதாக கூறி வந்தார்.
அவர், தனக்கு அறிமுகமானவர்களிடம், இ.எஸ்.ஐ மருத்துவமனை யில் நர்சு, மருத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் பணியி டம் காலியாக இருக்கிறது. ஏற்கனவே சிலருக்கு வேலை வாங்கி கொடுத்து உள்ளேன். பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். அதை நம்பி சூலூரை சேர்ந்த நுபைல் (22) என்பவர் அரசு வேலைக்காக பல லட்ச ரூபாய் பணம் கொடுத்தார். ஆனால் அவருக்கு வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.
வீட்டை காலி செய்தனர்
இது குறித்து நுபைல் மற்றும் முருகன், சரவணக்குமார் உள்ளிட் டோர் கோவை மாநகர போலீசில் புகார் அளித்தனர். அதில், அவர் கள் ஒவ்வொருவரும் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் கொடுத்ததாக வும், சிலரின் கல்வி சான்றிதழை வாங்கிய தன்யா, போலியான நியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது.
அதை கொடுத்து வேலை யில் சேர முயன்ற போது அது போலி யான ஆணை என தெரிய வந்தது. எனவே பணம் கொடுத்து ஏமாந் தவர்கள், தன்யாவிடம் பணம் மற்றும் சான்றிதழ்களை திரும்ப கேட்டனர். இதற்கிடையே தன்யா வும், அவருடைய கணவருடன் வீட்டை காலி செய்து விட்டு சரவணம்பட்டிக்கு சென்றனர்.
தம்பதி கைது
இதை அறிந்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், அவர்களின் வீட்டை முற்றுகையிட்டனர். உடனே சரவணம்பட்டி போலீசார் அங்கு விசாரணைக்கு சென்றனர். அப்போது தன்யா, வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் போலீசார் எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர். இதை யடுத்து தன்யா, அவரது கணவர் ஆகியோர் தப்பி சென்று விட்டனர். இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, கேரள மாநிலம் கண்ணனூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து தன்யா, கருணாநிதி ஆகியோரை கைது செய்தனர்.
ரூ.1 கோடிக்கு மேல் மோசடி
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கைதான தம்பதி கோவையில் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.59 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கலாம். கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்ேபாது கேரள மாநிலத்தில் தன்யா மொட்டை போட்டு கணவருடன் பதுங்கி இருந்துஉள்ளார். இதை கண்டறிந்து தன்யா, கருணாநிதி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர் என்றனர். கைதான தம்பதியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.