ரூ.1 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்

புன்னக்காயலில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ரூ.1 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்

Update: 2022-06-02 17:03 GMT

ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே புன்னக்காயலில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, தமிழக அரசின் 'நமக்கு நாமே' திட்டத்தில் குடிநீர் திட்டக்பணிகளுக்காக அகில இந்திய கப்பல் மாலுமிகள் நலச்சங்கம் ரூ.1 கோடியே 3 லட்சம் வழங்கியது. தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை அகில இந்திய கப்பல் மாலுமிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் அப்துல்கனி செராங் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு கலெக்டரிடம் வலியுறுத்துவதாக தெரிவித்தார். புன்னக்காயல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அகில இந்திய கப்பல் மாலுமிகள் நலச்சங்க பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தினர். முன்னதாக அவருக்கு புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் நலச்சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், புன்னக்காயல் கப்பல் மாலுமிகள் நலச்சங்க தலைவர் ரவி, செயலாளர் டானியல், பொருளாளர் கதிரவன், அகில இந்திய கப்பல் மாலுமிகள் நலச்சங்க துணைத்தலைவர் மிலன், அமைப்பு செயலாளர் சுரேஷ் சோலங்கி, சென்னை கிளை கப்பல் மாலுமிகள் நலச்சங்க தலைவர் கலைச்செல்வன், தூத்துக்குடி கப்பல் மாலுமிகள் நலச்சங்க தலைவர் ஜூடு வில்லவராயர், புன்னக்காயல் ஊர் தலைவர் அமல்ஸன், கடற்கரை கமிட்டி தலைவர் நாதன், புன்னக்காயல் பஞ்சாயத்து தலைவி சோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்