கொள்ளை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நாகை அருகே கொள்ளை வழக்கில் கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-05-18 18:56 GMT

 சிக்கல்:

நாகை மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியை சேர்ந்தவர் வேல்ராஜ்(வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நாகலட்சுமி. கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி வேல்ராஜ் வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினம் செக்கடி தெருவைச் சேர்ந்த சேகர் என்கிற கொறசேகர் (50) என்பவரை கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கொறசேகர் மீது நாகை, வெளிப்பாளையம், நாகூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் திருடியதாக அங்குள்ள போலீஸ் நிலையங்களில் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து ‌போலீஸ் சூப்பிரண்டு, கொறசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண் தம்புராஜ்க்கு பரிந்துரைத்ததன்பேரில் கொறசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கீழ்வேளூர் போலீசார் நாகை மாவட்ட சிறையில் இருந்த கொறசேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்‌.

Tags:    

மேலும் செய்திகள்