ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பேட்டை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 42). இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுத்தமல்லி விலக்கு வ.உ.சி.நகர் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் நடந்த தகராறில் ஏற்பட்ட மோதலில் கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வேண்டுகோளின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார். அதை கலெக்டர் விஷ்ணு ஏற்று மாயாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழங்கினார்.