நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடி சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்னடத்தை உறுதிமொழியை மீறிய ரவுடி சிறையில் அடைப்பு

Update: 2022-07-13 20:18 GMT

திருச்சி பாலக்கரை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சரித்திர பதிவேடு ரவுடி சந்திரசேகர்(வயது 28). இவர் தொடர்ந்து வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அப்போது, ஒரு ஆண்டுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன் என்றும், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்றும் அவர் நன்னடத்தை உறுதிமொழி எழுதிக்கொடுத்தார். இந்தநிலையில் அவர் அந்த உறுதிமொழியை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்