திருமங்கலம்
கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவர் மதுரையில் இருந்து செங்கோட்டை வரை ெரயில்வே பணிகளை ஒப்பந்த முறையில் பார்த்து வந்தார். மேலும் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ெரயில்வே பீடர் ரோடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று கண்ணன் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கண்ணன் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர் உடலை பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது ெதாடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.