நெகமம்
நெகமம் அடுத்த ஆலாம்பாளையம் வடக்குத்தோட்டம் இட்டேரியில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணப்பெருமாள் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சேவல் வைத்து சூதாடிக்கொண்டு இருந்த பெரியாக்கவுண்டனூரைச் சேர்ந்த பிரதீப் (வயது 40), முத்துசாமி (48), கனகராஜ் (41), குரும்பபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (25), ரஞ்சித் (25), கோட்டாம்பட்டி சிவானந்தம் (30), ஆனைமலை மணிகண்டன் (24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 சேவல் மற்றும் ரூபாய் 2500 பறிமுதல் செய்யப்பட்டது.