கூரை வீடு எரிந்து சேதம்

குத்தாலம் அருகே கூரை வீடு எரிந்து சேதம் அடைந்தது

Update: 2022-09-11 17:29 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே நெய்குப்பை வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் வெங்கடேஷ்(வயது 32). இவரது கூரை வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த அவரது மனைவி வினிதா தனது குழந்தைகளுடன் வெளியே ஓடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் கட்டில், பீரோ, முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த நிவேதா முருகன் எம்.எல்.ஏ., குத்தாலம் தாசில்தார் கோமதி, தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் உள்பட பலர் நேரில் சந்தித்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்