சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

ஜோலார்பேட்டை அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2022-06-26 17:45 GMT

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 24-ந்தேதி சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பினனர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்