ரூ.13 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி

காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் ரூ.13 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் .

Update: 2023-01-02 18:45 GMT

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி அருந்ததியர் காலனியில், மேம்பட்ட உலகளாவிய உற்பத்தி தொழில்நுட்பங்கள் (ஏ.ஜி.எம்.டி.) திட்டத்தின் கீழ் 9 லட்சத்து 50 ரூபாய் மதிப்பில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. அதே போல் இதே திட்டத்தில், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஆர்.பூசாரிப்பட்டி கிராமத்தில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 606 ரூபாய் மதிப்பில் சிமெண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் கலாகுமரேசன், ஆவின் துணை செயலாளர் அருணாசலம், மாணவரணி ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் கவுன்சிலர் அசோகன், ஒன்றிய துணை செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் சரவணன், பெரியமுத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜசேகர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நாராயணகுமார், வேலன், ஊர்கவுண்டர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள் சத்யா, சூர்யா, குமாரி, அலமேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்