டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சாலைமறியல்

டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சாலைமறியல்

Update: 2023-09-01 18:45 GMT

திருமருகல் பஸ் நிலையம் அருகில் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயராகவன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் திருமருகல் உள்ளிட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருமருகல் ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், 108 அவசர வாகனம் கூடுதலாக வழங்க வேண்டும். திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். திருமருகல் பஸ் நிலையத்தில் நவீன கட்டண கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். ஆற்று கரையோரம் குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சாலைமறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டவர்களை நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் அக்பர் அலி, ராமகிருஷ்ணன் சுரேஷ் ஆகியோர் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் நாகூர் -நன்னிலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்