சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-21 19:00 GMT

மயிலாடுதுறை;

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் குடும்பங்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள கோட்ட பொறியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள சாலை பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோாிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்