சாலை பணியாளர்கள் முரசு கொட்டி ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் சாலை பணியாளர்கள் முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்/
பொள்ளாச்சி
41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவிக்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணி முழுவதும் ஆபத்து நிறைந்த பணிகளாக உள்ளதால், ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி வழங்கவும், சாலை பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு முரசு கொட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பொள்ளாச்சி கோட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் மருதாசலம் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.