பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொள்ளாச்சி
சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி-கோவை ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன் சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வெற்றிவேல், இணை செயலாளர் ஜான்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் கோட்ட செயலாளர் ஜெகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் அய்யாசாமி, இணை செயலாளர் இடும்பன், மாவட்ட இணை செயலாளர் ரங்கராஜ், வட்ட கிளை தலைவர் பத்மநாபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட பொருளாளர் சின்னமாரிமுத்து நன்றி கூறினார்.