சாலைப்பணியாளர்கள் தூய்மை பணி

மாப்பிள்ளையூரணியில் சாலைப்பணியாளர்கள் தூய்மை பணிமேற்கொண்டனர்.

Update: 2022-11-29 18:45 GMT

தூத்துக்குடி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து டேவிஸ்புரம் ஜெ.ஜெ.நகரில் தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். பொருளாளர் குருசாமி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டினார்.

நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர் குற்றாலிங்கம், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, செயலாளர் செம்புலிங்கம், விருதுநகர் மாவட்ட தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பிரேம்குமார், நெல்லை மாவட்ட தலைவர் மாரிபாண்டி, செயலாளர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்