சாலை பணியாளர் தற்கொலை
எருமப்பட்டி அருகே சாலை பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:-
எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நல்லப்ப ரெட்டியார் மகன் செல்வராஜ் (வயது 58). இவர், நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர், மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று காலையில் ஊருக்கு அருகில் உள்ள திம்மாங்குட்டையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட செல்வராஜூக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.