அடிக்க முடியாத பம்பை அகற்றாமலேயே சாலைப்பணி

அடிக்க முடியாத பம்பை அகற்றாமலேயே சாலைப்பணி போடப்பட்டது.

Update: 2023-05-17 18:18 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பகுதியில் திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த சாலைவிரிவாக்க பணியின்போது அருகிலும் நடைபாதை போல அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சாலையோரம் இருந்த அடிபம்பை அகற்றாமல் இருந்துள்ளது. சாலையோரம் இருந்த அடிபம்பு பகுதியில் நடைபாதைக்காக சிமெண்டு தளம் அமைந்த போதும், அந்த பம்பை அகற்றவில்லை. அப்படியே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அடிபம்பு பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், அதனை அகற்றாமல் அப்படியே தளம் அமைத்து பணியை மேற்கொண்டிருக்கின்றனர். அந்த அடிபம்பு முற்றிலும் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகிறது. கைப்பிடி தரைத்தளத்தில் ஒட்டியபடி இருக்கிறது. நடைபாதையில் அமைந்திருப்பதாலும் இடையூறாக உள்ளது. அடிபம்பை அகற்றாமல் பணியை மேற்கொண்டவர்கள் பற்றி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்