ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி
ரூ.17 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
காரைக்குடி,
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 9 -வது வார்டு இலுப்பக்குடி ஊராட்சி காந்தி நகரில் பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டனர். கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சரண்யா செந்தில்நாதனிடம் சாலை வசதி கேட்டு கோரிக்கை வைத்தனர். தற்போது காந்தி நகர் முதல் மற்றும் 2-வது வீதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சாக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் நிதியில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் தொடங்கியது. சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன் தலைமை தாங்கி சாலை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், துணைத்தலைவர் திருநெல்லை ரகுபதி, வார்டு உறுப்பினர்கள் செல்வி, செந்தில், கிளை செயலாளர்கள் ராமு, பெரியசாமி, ஒப்பந்தகாரர் சுந்தரராஜன் உள்பட அந்தபகுதி மக்கள் கலந்துகொண்டனர்.