ரூ.4 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடக்கம்
நெல்லை அருகே ரூ.4 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடக்க விழா நடந்தது.
பேட்டை:
நெல்லை அருகே உள்ள தென்கலத்தில் இருந்து ரஸ்தா வரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மானூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.4½ கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் பணி நேற்று தொடங்கியது.
இந்த பணியை மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், துணை தலைவர் நைனா முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.