ரூ.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

திருக்கோவிலூர் அருகே ரூ.70 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Update: 2023-02-27 18:45 GMT

திருக்கோவிலூர்

முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.70 கோடியில் கடலூர்-சித்தூர் சாலையில் தபோவனம் முதல் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்லையில் அமைந்துள்ள காட்டுகோவில் வரை சுமார் 9 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையை நான்கு வழி பாதையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை நெடுஞ்சாலை துறையின் திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேரில் ஆய்வு செய்தார். அப்போது சாலை பணிகள், சிறுபாலங்கள் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் உள்ள மாற்றுப்பாதை மற்றும் அதன் பாதுகாப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்த அவர் பணியை தரமாகவும், விரைவாகவும் நடத்தி முடிக்க அதிகாரிகளிக்கு உத்தரவிட்டார். அப்போது கள்ளக்குறிச்சி கோட்ட பொறியாளர் ராஜ்குமார், திருக்கோவிலூர் உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு, கள்ளக்குறிச்சி தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் புகழேந்தி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்