கோத்தகிரியில் இருந்து குன்னூர் வரை ரூ.50 லட்சத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி

கோத்தகிரியில் இருந்து குன்னூர் வரை ரூ.50 லட்சத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-12 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் இருந்து குன்னூர் வரை ரூ.50 லட்சத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ரூ.50 லட்சம்

கோத்தகிரி நெடுஞ்சாலைத் துறை சார்பில் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணி, குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்து தடுப்புச் சுவர் கட்டும் பணி, பிரதான சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கும் பணி, பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக 50 லட்சம் ரூபாய் செலவில் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் கட்டபெட்டு அருகே ஆபத்தாக விபத்து ஏற்படும் வகையில் இருந்த குறுகிய வளைவை விரிவாக்கம் செய்து, மழை நீர் வழிந்தோடும் வகையில் பாலத்துடன் கூடிய தடுப்பு சுவர் கட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

7 இடங்களில் சாலை விரிவாக்கம்

இதனைத் தொடர்ந்து இந்தப் பணிகள் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப் பொறியாளர் சாமியப்பன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதே போல கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் சுமார் 7 இடங்களில் சாலை விரிவாக்கம் செய்து தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும், இந்தப் பணிகள் அனைத்தும் வரும் கோடை சீசனுக்குள் முடிவடைந்து, சீசன் நேரத்தில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலின்றி இந்த சாலையில் சென்று வர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்