போலி பதிவு எண் மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது

போலி பதிவு எண் மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறி செய்ததாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-02 21:07 GMT


போலி பதிவு எண் மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறி செய்ததாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலி வாகன எண்

மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் காளவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களிடம் போலீசார் வாகனத்தை நிறுத்தும்படி சைகை செய்தனர்.

ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை விரட்டிச் சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். வாகன எண்ணை சோதித்த போது வாகனம் போலியானது என தெரியவந்தது.

2 பேர் கைது

மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சஞ்சய் மற்றும் கோவையை சேர்ந்த கவுரிசங்கர் என்பதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட 2 பேரும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கரிமேடு போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போலீசார் சோதனை செய்ததில் அவர்களிடம் கள்ள நோட்டுகள் இருந்ததாகவும், அவைகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்