சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டி

Update: 2023-01-20 14:21 GMT

திருப்பூர்

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திருப்பூர் வட்டார அளவில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து நேற்று திருப்பூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகள் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, சுலோகன் எழுதும் போட்டி, மைம்ஸ், நாடகப்போட்டிகள் நடைபெற்றன. இதில் 120 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது. இதில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பக்தவத்சலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்