சாலை பாதுகாப்பு வார விழா
சாத்தூர் அருகே சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி மையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாக மேலாளர் லோகநாதன் என்ற பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுங்கச்சாவடி ஊழியர்கள், போக்குவரத்து போலீசார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விபத்துகளை எப்படி தடுப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சுங்கச்சாவடி ப்ராஜெக்ட் மேலாளர் பிரவீன்குமார் ரெட்டி செய்திருந்தார்.