அரசு போக்குவரத்துக்கழக சார்பில்சாலை பாதுகாப்பு வாரம் அனைத்து கிளைகளிலும் கடைபிடிப்பு

அரசு போக்குவரத்துக்கழக சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் அனைத்து கிளைகளிலும் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2023-01-22 18:45 GMT


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மண்டலம் மூலம் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டது.

அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் பின்புறம் பிரதிபலிப்பு பட்டை ஒட்டுதல், பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம், சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழி போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கிளைகளில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு கண் பரிசோதனை முகாமும், கண்காட்சி வாகனத்தின் மூலம் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. சுங்கச்சாவடிகளில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கழக டிரைவர்களுக்கு பிஸ்கட், தேநீர் வழங்கி சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு பாதுகாப்பான இயக்கம் குறித்து நெறிமுறைகளை கடைபிடித்து பஸ்களை இயக்க அறிவுரை வழங்கப்பட்டது. இதுதவிர பஸ் நிலையங்களில் பாதுகாப்பான இயக்கம் குறித்து அனைத்து நாட்களிலும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மேலாண்மை இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்