சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்

சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-06-22 19:20 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.பி. ஜோதிமணி தலைமை தாங்கினார். கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சாலை விபத்துகளை குறைத்தல், சாலைகளின் தரத்தினை மேம்படுத்துதல், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல், சட்ட விதிகளை கடுமையாக அமல்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுவது குறித்தும், விபத்துகளில் அதிக மரணங்கள் ஏற்படுவது குறித்தும் அதனை களைவது தொடர்பாகவும், மாவட்டத்தில் உள்ள கரும்புள்ளி இடங்கள் குறித்தும், தேசிய நெடுஞ்சாலையில் கரும்புள்ளி இடங்களில் தேவையான இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இடங்கைள கண்டறிந்து அரசுக்கு பரிந்துரைக்கு அனுப்புவது குறித்தும், தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிப்பட்டி, வீரராக்கியம் மற்றும் மண்மங்கலம் பகுதிகளில் உயர்மட்ட பாலம் தேவை என்பது குறித்தும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் அமைக்க வேண்டும் என பஸ் மற்றும் லாரி ஓட்டுனர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

கரூர்-கோவை சாலையில் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு கோவை சாலையில் தண்ணீர்பந்தல் முதல் திண்டுக்கல் சாலையில் உள்ள சுக்காலியூரை இணைக்கும் பகுதியில் சுற்றுவட்ட சாலை அமைக்கப்பட்டால் இந்த போக்குவரத்து நெரிசல் குறையும் என நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அனுமதி வரப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்