சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தட்டார்மடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தட்டார்மடம்:
தட்டார்மடத்தில் போலீசார் சார்பில் மாற்றத்தை தேடி மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் குருசுமிக்கேல், சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலர் லூர்து மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலை பாதுகாப்பு குறித்து டிராக்டர் டிரைவர் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து டிராக்டர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனம் வைத்திருப்பவர்களுக்கு வாகன இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம், வாகன உரிம ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும், விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில் டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.