சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

Update: 2023-01-14 18:53 GMT

அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி வாரணவாசி கிராமத்தில் நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர் முன்னிலையில் வாகன ஓட்டிகளிடம் பிரதிபலிப்பான் மற்றும் துண்டு பிரசுரங்களை கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கினார். மாவட்ட காவல்துறை சார்பில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் சரக்கு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், இழுவை வாகனங்களில் சரியான சிவப்பு பிரதிபலிப்பான் பட்டை இல்லாத காரணத்தால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் பிரதிபலிப்பான் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு பிரதிபலிப்பான் ஒட்டப்பட்டு, அதன் அவசியம் பற்றி விளக்கி கூறப்பட்டது. இதில் அரியலூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் அகமது உசேன் மற்றும் ேபாலீசாா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்