ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி சாலை மறியல்
பேரளம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி சாலை மறியல் நடந்தது.
நன்னிலம்;
பேரளம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி சாலை மறியல் நடந்தது.
சாலை மறியல்
காரைக்கால்- பேரளம் இடையே ெரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதில் அம்பகரத்தூர் அருகே ஒரு ெரயில்வே சுரங்கப்பாதை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை அமைத்தால் பேரளம் அருகே உள்ள கரைகண்டம், பேட்டைபாலூர், உபயவேதாந்தபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்திய சாலை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்றும் பள்ளி மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் சிரமப்படுவார்கள் என கூறி சுரங்கப்பாதையை கரைகண்டம் நடைபாதையிலேயே அமைக்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கரை கண்டம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
சாலை மறியலில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி ஒன்றிய செயலாளர் தீன கவுதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் ஆசை தம்பி, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இது குறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினா். இதை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது.