உம்பளச்சேரி-பிராந்தியங்கரை இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

தலைஞாயிறு அருகே உம்பளச்சேரி- பிராந்தியங்கரை இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-04-02 19:15 GMT

தலைஞாயிறு அருகே உம்பளச்சேரி- பிராந்தியங்கரை இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சாலை சேதம் 

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே உம்பளச்சேரியில் இருந்து வேதாரண்யம் ஒன்றியம் பிராந்தியங்கரை வரை உள்ள தார்ச்சாலை கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வழியாக பயணிப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள இந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். இவ்வாறு 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் இருந்து விழுந்து கை, கால்களில் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

நடவடிக்கை இல்லை

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை புகார்மனு அனுப்பியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

மேலும் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி, துளசாபுரம் பகுதிகளில் இருந்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் செல்வதற்கு இந்த சேதம் அடைந்த சாலையை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

கிராம மக்கள் எதிர்பார்ப்பு

இந்த நிலையில் சாலை மிகவும் ேமாசமாக இருப்பதால் அரசு அலுவலகங்களுக்கு கோரிக்கை மனுக்கள் அளிக்க செல்லும்ே்பாதும், முக்கிய ஆவணங்களில் அதிகாரிகளிடம் கையெழுத்து பெற செல்லும்போதும் கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

உம்பளச்சேரி-பிராந்தியங்கரை இணைப்பு சாலை வேதாரண்யம், தலைஞாயிறு ஆகிய 2 ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ள சாலையாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்