ரூ.48¾ லட்சத்தில் சாலை வசதி
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் ரூ.48¾ லட்சத்தில் சாலை வசதி
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மங்களாம்பிகைநகர், ஜெய சக்திநகர் ஆகிய இடங்களில் மூலதன மானிய திட்டத்தின் மூலம் ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் சாலை அமைய உள்ள பகுதியை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இளநிலை உதவியாளர் ராமசாமி, தொழில்நுட்ப உதவியாளர் தேசிங்கு, பேரூராட்சி கவுன்சிலர் பாபு மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.