ரூ.23½ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
அகரக்கொந்தகை ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
திட்டச்சேரி;
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வாழ்மங்கலம், கள்ளிக்காட்டு, போலகம், வள்ளுவர் தெரு வரை உள்ள 1 கி.மீட்டர் தூரம் இணைப்பு சாலை அமைக்க ரூ.23 லட்சத்து 49 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமை தாங்கி, சாலை அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயபால், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுரேஷ், உறுப்பினர் மதுரைவீரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.