கிருஷ்ணகிரி அருகே ரூ.90.96 லட்சத்தில் சாலை அமைக்கும் பணிஅசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2023-06-30 19:45 GMT

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி ஒன்றியம் திப்பனப்பள்ளி ஊராட்சி கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை முதல் திப்பனப்பள்ளி வழியாக கோடியூர் கிராமத்திற்கு 45 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரண்டு அடுக்கு தார்சாலை அமைக்கப்படுகிறது. அதேபோல், தாசரப்பள்ளி சாலை முதல் திப்பனப்பள்ளி வரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கப்படுகிறது. ரூ.90 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜைசெய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் அம்சாராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், ஜெயராமன், கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கட்ராமன், ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி கிருஷ்ணன், முன்னாள் தலைவர் தீர்த்தகிரி, கிளைச் செயலாளர்கள் ராமன், சத்தியசீலன், வேடியப்பன், வங்கி துணைத் தலைவர் ரமேஷ், வேடியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்