புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலை

புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலை

Update: 2023-05-24 19:57 GMT

அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் வலுவிழந்த காரணத்தால் ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. புதிய பால கட்டுமான பணிகளின் போது பழைய பாலத்தின் வடபுற சாலை சரிந்து விழுந்தது. இதனால் அய்யம்பேட்டை -கணபதி அக்ரகாரம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பால கட்டுமான பணிகளையும், சரிந்து விழுந்த சாலையையும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் செல்போனில் பேசி, புதிய பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆய்வின்போது பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் என்.நாசர், நகர செயலாளர் வக்கீல் டி.பி.டி.துளசி அய்யா, பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணை தலைவர் அழகேசன், வருவாய் ஆய்வாளர் ரெஜிலா தேவி உள்பட பலர் வந்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்