பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்

பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-19 19:26 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து கொண்டலூரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கொண்டலூரில் ஆவுடையானூர்- பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடனே பஞ்சாயத்து தலைவர் குற்றாலிங்கராஜன் என்ற கோபி மற்றும் பாவூர்சத்திரம் போலீசார், யூனியன் ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்